Yesu rajane

இயேசு ராஜனே (Yesu rajane


இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

1.அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே சமாதானமே

2.இம்மானுவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே

3.யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே

4.திராட்சைச் செடி நீரே தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே நட்சத்திரமே

5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes