உம்மைத் தானே நான் முழு உள்ளத்தோடு (Ummai thaane naan mulu ullathodu
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
அல்லேலூயா ஆராதனை
1.நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் - 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்
2.நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகிறீர்
3.புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர்
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா
4.மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
Thanks,super song & music.
ReplyDelete