Kalappoluthum ennai kaividatha

களப்பொழுதும் என்னை கைவிடாத (Kalappoluthum ennai kaividatha 


களப்பொழுதும் என்னை கைவிடாத உம்மை
கர்த்தாவே என்று துதிப்பேன்
இமைப்பொழுதும் என்னை மறவாத
உந்தன் பாதம் பணிந்திடுவேன்
ஆ என் நேசரே வாரும் என்னிலே
நேசர் பாதமே எந்தன் தஞ்சமே

1.உறவுகள் கூட பிரிந்திடலாம்
உண்மைகள் கூட மறைந்திடலாம் - 2
மறவாத நேசர் இயேசுவுண்டு
மறவாமல் உன்னை நடத்திடுவார் - 2

2.அழிந்திடும் மனிதன் அளித்திடும் பாசம்
தேவை முடிந்தவுடன் முடிந்திடுதே - 2
உண்மை அன்புக்காய் ஏங்கி நின்றேன்
உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் - 2

3.ஆத்துமாவே னே கலங்குவதேன்?
நம்பிக்கை நங்கூரம் இயேசுவன்றோ - 2
உள்ளங்கையில் என்னை வரைந்திட்டவர்
உண்மையாய் உன்னை நடத்திடுவார் - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes