Kangalai yereduppen

கண்களை ஏறெடுப்பேன் (Kangalai yereduppen

கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண்

1.காலைத் தள்ளாட வொட்டார்
உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரை
காப்பவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்

2.பக்தர் நிழல் அவரே  எனை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டேன்னை அக்காவல் புரியவே

3.எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes