நன்றி சொல்லியே இயேசுவை (Nandri solliye yesuvai
நன்றி சொல்லியே இயேசுவைநன்மைகள் பொழிந்தாரே - ஏராளம்
கிருபை பொழிந்தாரே
துரோகி என்னையே தூக்கி எடுத்து
தேற்றி அணைத்தாரே
1.பாவி என்னையே பாரில் கண்டீரே
தேடியே வந்தீரே - கல்வாரியில்
அன்பினால் இழுத்தீரே
நன்றியால் பாடுவேன்
2.தனித்த என்னையே
அணைத்துக் கொண்டீரே
உம்மோடு இணைத்தீரே பேரன்பினால்
ஆனந்தம் தந்தீரே நன்றியால் பாடுவேன்
3.தாழ்ந்த என்னையே தாங்கி வந்தீரே
ஆவியால் நிறைத்தீரே - கிருபையால்
வரங்கள் ஈந்தீரே நன்றியால் பாடுவேன்
4.வியாதி வறுமை வேதனை துன்பமே
நீக்கி காத்தீரே - எப்போதுமே
என்னுடன் இருந்தீரே நன்றியால் பாடுவேன்
5.வஞ்சக உலகில் நண்பனாய் வந்து
நேசத்தை தந்தீரே எந்நாளுமே
மாறாமல் இருந்தீரே நன்றியால் பாடுவேன்
Post a Comment