Osannah paadi paadi

ஒசான்னா பாடி பாடி (Osannah paadi paadi

ஒசான்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில் அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து உந்தன் அன்பை
எடுத்துச் சொல்வேன் - 2

1.ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
களிமண்ணாலே வனைந்த என்னை கழுவியெடுக்க குருதி தந்தீர்
சிந்திய இரத்தம் எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியும்
விலைதான் தகுமோ
உம்மைப்போல் ஆண்டவர்
எவருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
உம்மையல்லாமல்
ஒரு வாழ்வும் எனக்கில்லை

2.வானதூதர் வாழ்த்துப் பாடி
வாகைசூடி வானில் வருவீர்
மேகக் கூட்டம் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவர் கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ
இனி வரும் நாளில் - என்
இருதயத்தால் என்றும்
ஸ்தோத்தரிப்பேன்
நீர் வரும் வரை உம் வழி
நிலைத்திருப்பேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes