Paareer arunothayam

பாரீர் அருணோதயம் (Paareer arunothayam


பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்

1.காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதுரம் - இயேசு

2.அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தாங்குகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே

3.என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்

4.என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினின் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நான் செல்வேன் அந்நேரமே

5.நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes