பிதாவுக்கு ஸ்தோத்திரம் {Pithavuku sthothiram
பிதாவுக்கு ஸ்தோத்திரம
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே
பாவ பாரத்தினின்று
என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று
என்னைக் காத்திட்டார் - பிதா
1.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே
சேனை தூதர்களை தந்து விட்டாரே - பிதா
2.வருடத்தை நன்மையால் நிறைப்பவரே
வார்த்தையினால் அதிசயங்கள்
காணச் செய்யுமே - பிதா
3.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேன்
பொன் முகத்தையே
Post a Comment