Yaaridathil poven

யாரிடத்தில் போவேன் (Yaaridathil poven


யாரிடத்தில் போவேன் நான் இறைவா
உம்மையன்றி யாரு உண்டு தேவா

துதிகளின் பாத்திரரே
ஸ்தோத்திர பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே
உம்மையன்றி யாருண்டு எனக்கய்யா

1.வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
உம்மிடமே உள்ளதைய்யா
வாழவைக்கும் உந்தன் முகம்
தினம் தினம் பார்ப்பேனைய்யா
கூப்பிடும் காக்கைகளை போஷிக்கும்
என் தெய்வமே
கூப்பிடும் எளிய என்னை. மறவாத என் நேசரே

2.கண்களை கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவிக்கும் எந்தன் தேவன்
உயிரோடு இருக்கின்றீர்
கண்ணீரைக் கணக்கில் அல்லோ
வைத்து இருக்கின்றீர்
அலைச்சல்கள் யாவையும்
அறிந்தே இருக்கின்றீர்

3.எந்தன் தேவை எல்லாம்
உமக்குத் தெரியுமையா
எந்தன் குறைவு எல்லாம்
நிறைவாக்கி தாருமையா
உமது கை திறக்க
நான் அதை வாங்கிக் கொள்வேன்
நன்றி நன்றி என்று நாள் முழுவதும்
சொல்லிடுவேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes